நா தினமும் நினைக்கிறேன் ப்பா...ஒரு நாள் கூட நீ இல்லாம, உன் நினைப்பு இல்லாம ,உனக்காக அழுக முடியாம என்னால நகரவே முடியல ப்பா...
தினம் தினம் எதாது ஒன்னு,எதாது ஒரு patient-ஓ,அவங்களோட பேரோ,ரோட்-ல அப்பா கூட பொண்ணு போகும் போதோ,பொண்ண அவங்கப்பா தூக்கிட்டு வரும்போதோ,யாராது அவங்கப்பாவ ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு வரும்போதோ,எங்க இருந்தோ திடிர்னு வர காத்து மாதிரி ,நினைப்பு முழுக்க நிறைஞ்சு போய்ட்ற ப்பா...
நிறைய முறை கூப்பிட்டு பாத்துக்கிறேன் அப்பா அப்பானு...உனக்கு கேக்கும்ல...ம்ம்ம்...நீ இங்கதானே இருக்க...என்னால வெளிலயே வர முடியல ப்பா...ரொம்ப கஷ்டமா இருக்கு...
ஒரு போன் பண்ணி உன்கூட பேசனும் போல இருக்கு..உன் குரல கேக்கனும் போல இருக்கு...
எப்பவும் நீதான் என்ன பாத்துக்கிட்ட...கடைசி கொஞ்ச நாளாதான் நா உன்ன பாத்துக்கிட்டேன்...
அவ்ளோ பேசுனோம்ல ப்பா..ஆனா எங்கிட்ட ஏன்ப்பா சொல்லவே இல்ல...விட்டுட்டு போய்ட்ட...ம்ம்ம்ம்....
இறப்புகள் இயல்புதான்...சில சமயங்களில் இயல்புக்கு பழகதான் முடியவில்லை...
எப்படி இந்த ஆற்றாமையை கடக்க போகிறேன் என்று தெரியவில்லை...
உன் நினைவின் துணை கொண்டே வாழ்கிறேன்...
அப்பா...miss you ppaa...love you ppa..
No comments:
Post a Comment