கொஞ்ச நாளைக்கு முன்ன தான் டாடா விமர்சனங்கள் நல்லா வருதுங்கிறதுக்கு முன்னவே பார்க்கனும்னு நினைச்சு பார்த்த படம்..
ஏன்னா நா கவின் ஃபேன்..
கவின்க்கிட்ட பிடிச்சதே அந்த எதார்த்தமான நடிப்புதான்..
அந்த கதாப்பாத்திரத்த இயக்குனர் எடுத்துபோன விதம்,அதுல கவின் எப்டி இவ்ளோ கச்சிதமா பொருந்துனானு தெரில..
சிலர்லாம் நல்லாருந்தா, நாமளே நல்லாருந்த மாதிரி இருக்கும்..அப்டிதான் கவின் மூஞ்சி..நிறைய முறை இந்தப்பைய தனக்கான ஒரு இடத்த இந்த சினிமால தக்க வச்சுக்கனும்னு தோணும்...
தமிழ் சினிமாக்கு இன்னொரு தரமான நடிகர் தாயர்-னு சத்தமா சொன்ன படம்தான் டாடா..
படமே ,மொத்தமா சேர்த்து நல்ல உணர்வுகளை வெளிப்படுத்துற விதமா அமைஞ்சது...
முகம் சுளிக்கிற மாதிரியோ,எதுக்குடா இதுன்னு நிறைய இடத்துல தோணல...
நல்ல படம்..
ஆனா அந்த கதை,உண்மையான கதையோ,கற்பனை கதையோ!
கல்லூரி காலம்,வாழ்க்கையோட நினைவுகள எப்பவும் இளமையா வச்சுக்கக்கூடிய காலக்கட்டம்,அதுல போய்,மேட்டரு,குழந்தைலாம் not good advice..அது காதலுக்கான காலம்,எல்லை மீறாத காமத்தோட காதல கொண்டாடி,அதற்கான வயது வரும்போது மற்றவைகளை பார்த்துக் கொள்வோம்....
டாடா- நல்ல தந்தையின் கதை...
அப்றம் காற்று வெளியிடை படத்துல இருந்து ஒரு காட்சிய பார்த்தேன்...அப்ப தோணுச்சு,டாடா-காற்று வெளியிடை லீலாவின் ஆண் கதை சாயலாக தோன்றியது...அதிலும் பொருத்தமாக திரைப்படத்தின் இறுதிக்கட்டங்கள்...
No comments:
Post a Comment