Something triggers you to write or speak about the things that shook you or the things that have never left your mind. அந்த தாக்கம்தான்..
நமக்கு பழக்கப்பட்ட விஷ்யங்களை எங்கயோ எப்பவோ நமக்கே தெரியாம நிறுத்திருப்போம்..அதுக்கு எது வேணாலும் காரணமா இருக்கலாம்.வேலைப்பளு, வேற வேலைகள்,தேர்வுகள்,சோம்பேறித்தனம்,இழப்புகளோட தாக்கம்,எத எங்க சரி செய்றதுனு தெரியாம தேங்கி நிப்போம்..அந்த நேரத்துல விட்டத ,விட்ட இடத்துல இருந்து,நம்ம தொடங்க ஒரு உந்துசக்தி இந்த பிரபஞ்சத்துல இருந்து மாயவித்தை மாதிரி நம்ம கைக்குள்ள மென் இறகு மாதிரி வந்து விழும்..அத வருடாம வாழ்ந்து என்ன பயன்?..
அப்டி ரொம்ப நாளா எழுதவே மறந்த என்னைய எழுத சொல்றது இந்த படம்..இதான் என்னோட ட்ரிக்கர்..
புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட நிஜக்கதையின் திரையாக்கம் இந்தப்படம்..
பசுமையும்,பாலைவனமும் தான் படம்.. வெளி நாட்டுக்கு வேலைக்கு போய்,ஆள் இடம் தெரியாம ,பாலைவனத்துல ஒட்டகம் செம்மறியாடு மேய்க்கிறதுக்காக மாட்டிக்கிற, படிக்காத ஹீரோவோட,வாழ்க்கைப் போராட்டந்தான் கதை..
நம்ம அனுபவிக்காத எல்லாமே நமக்கு கற்பனைதான்..-கரு.
வாழ்ந்த வாழ்க்கையோட பசுமையான ஈரம் ,அந்த பாலைவனத்துல பிருத்வியோட உயிர தக்கவச்சுக்கிச்சு.. அந்த பசுமையான நினைவுகளோட அரசி அமலாபால்,fresh Romatic scenes after dheeran adhigaram -1( எனக்கு அப்டிதான் தோணுச்சு)..அப்டியே கட் பண்ணா பாலைவன வாழ்க்கை...
காதிரினு ஒரு ஆப்பிரிகா காரன்-Positive vibe for that movie(வாழ்க்கைக்கான கதாபாத்திரம்)..
பிருத்வியோட நடிப்பு வேற லெவல் தரம்...(The actor who admires me more after fahath) படம் பாருங்க தெரியும்..
தலைவர் -ரகுமான் background score -தரமான சம்பவம்..
படம் கொஞ்சம் slow -ஆ போகுற மாதிரி இருக்கும்,நம்மளே பேசாம வீட்டுக்கு கெளம்பி போய்டலாமானு இருக்கும்,அந்த பாலைவன வெளிய திரைல பாக்கும்போதே தலையே சுத்திரும்..
நீங்க பொறுமையான ,நல்ல படம் பாக்க விரும்புற மனுஷன்-னா கண்டிப்பா ஆடுஜீவிதம் பரிந்துரை உங்களுக்குதான்..
No comments:
Post a Comment