காலையில,கஜீராஹோ சிற்பம் ஒரு புகைப்படம் பார்த்தேன்...இந்த வார்த்தைய எங்கையோ கேட்ட மாதிரி இருக்கேனு யோசிட்டு இருக்கும் போது,ஆமால அந்த பாட்டுனு தேடி போய் பார்த்தேன்..
பழனிபாரதி:
கஜுராஹோ கனவில்
ஓர் சிற்பம் கண்ணில் மிதக்குதே!
அறியாதோர் மனதிலே ரகசிய
வாசல் திறக்குதே!
கொஞ்ச நாளுக்கு முன்னாடிதான் டீவி-ல பார்த்தேன்...
இதும் அவரோட இன்னொரு பாட்டு..
Alps மலை காற்று வந்து நெஞ்சில் கூசுதே
BBC செய்தியெல்லாம் நம்மை பேசுதே
Michael Angeloவின் சிற்பம் எதிரில் நடந்து வந்ததென்ன
Babylonன் தொங்கும் தோட்டம் பணியில் நனைந்து நின்றதென்ன
உலகில் அதிசயங்கள் ஏழு அதிலேன் உன்னை சேர்க்கவில்லை
நம் இளமை துள்ளும் அழகை Shelley Bysshe பாடவில்லை
கஜுராஹோ சிற்பங்கள நா பார்த்ததில்ல..hope,இந்த வருஷத்துக்குள்ள பார்த்தடனும்..
வாலிதான் நம்ம பார்த்த சிற்பங்கள பத்தி எழுதியிருப்பாரு..
பல்லவ சிற்பம்,சித்தன்னவாசல் சிற்பம்..
வாலி:
என்ன விலை அழகே..
பல்லவன் சிற்பிகள் அன்று
பண்ணிய சிற்பத்தில் ஒன்று
பெண்ணென வந்தது இன்று சிலையே!
உந்தன் அழகுக்கில்லை ஈடு...
உன் புகழ் வையமும் சொல்ல
சிற்றன வாசலில் உள்ள
சித்திரம் வெட்குது மெல்ல நல்ல நாள்
உனைச் நானும் சேரும் நாள்தான்..
வேற லெவல் பாட்டுல..
வைரமுத்து:
ஒய் இஸ்தான்புல் ராஜ குமாரி!
முத்தத்தால் சூடு கிளப்பு!
ஷார்ஜாவின் ராஜ குமாரா!
செய்வோமா இளமை தப்பு!
நளந்தா ராஜ வம்சத்தில்
நான் வந்தேன் நீண்ட வாளாக!
மடிஸ்தாவின் ராஜ வம்சத்தில்
நான் வந்தேன் வாளின் உரையாக!
வாளோடு உரையை போல்
சேர்வோம்
வாழ்வோடு சரியாக..
அடுத்து தலைவர் பாட்டு..ரம்யா கிருஷ்ணனுக்கான வர்ணனை..
மின்சார பூவே!
வெண்ணிலவை தட்டி தட்டி செய்து வைத்த சிற்பம் ஒன்று கண்டேன்..
அதன் விழிகளில் வழிவது அமுதல்ல விஷம் என்று கண்டேன்...
அதன் நிழலையும் தொடுவது பழியென்று விலகி விட்டேன்..
யார் சொல்வதோ யார் சொல்வதோ?
வைரமுத்து சொல்லிருக்காப்டி..
கல்லுகுள்ளே சிற்பம் தூங்கி கிடக்கும்,
சின்ன உளி தட்டி தட்டி எழுப்பும்,
அது கல்லின் தோல்வியா இல்லை உளியின் வெற்றியா?
கண்ணதாசன்:
நம்ம பார்த்த சிற்பங்கள் பத்தின பாட்டு:
தென்றலது உன்னிடத்தில்
சந்தம் தேடி சிந்து பாடி உந்தன் சன்னதிக்கு நான் வருவேன்...
தஞ்சை கோவில் சிற்பம் போலே ஒரு முத்திரையை நான் பதிப்பேன்
தஞ்சை கோவில் சிற்பம் போலே ஒரு முத்திரையை நான் பதிப்பேன்..
அனுதினம் இரவெனும் அதிசய உலகினில் ஆனந்த நீராடுவோம்...
தினம் ஒரு புதுவகை கலைகளை அறிந்திடும் ஏகாந்தம் நாம் காணுவோம்..
கள்ளிலிருக்கும் முல்லை மொட்டு
கண்ணெடுத்து பார்ப்பதென்ன
கன்னம் மின்னும் வெள்ளி தட்டு
துள்ளி வந்து கேட்பதென்ன
தேரோடு சிற்பம் வந்து ஊர்வலந்தான் போவதென்ன
பா.விஜய்-personal favorite.. Epic song..
சிற்பம் போல செய்து என்னை
சேவித்தவன் நீயே நீயே
மீண்டும் என்னை கல்லாய் செய்ய
யோசிப்பதும் ஏனடா – சொல்
யாருமில்லா தனியரங்கில்…
நா.முத்துக்குமார்:
இந்தப்பாட்டு தனி போதை..
இன்னும் கண்கள் திறக்காத சிற்பம்..
ஒரு கோடி பூ பூக்கும் வெட்கம்..
ஆண் மனதை அழிக்க வந்த சாபம்..
அறிவை மயக்கும் மாய தாகம்..
கபிலன்:
வித்தியாசமான வரிகள்:
தெர்மாக்கோல் சிற்பம் நீ!
உன்னில் ஒட்டிக்கொண்டுள்ள
சின்ன வெள்ளைப் பந்தெல்லாம் நானடி..!
அய்வா அய்வா அய்வா அழகே வா வா!
தண்ணீரில் சிற்பம் நீ
கோடைக்கால தாகம் நான்
உன்னை மொண்டு நெஞ்சுக்குள் ஊற்றவா..
அறிவுமதி:
பாரதிக்கு கண்ணம்மா...
ஐயையோ தீயை எந்தன் நெஞ்சில் வைத்தாளே!அம்மம்மா சொர்க்கம் ஒன்றை வாங்கி தந்தாளே!ஹே... கல்லைத்தான் தட்ட தட்ட சிற்பம் பிறக்கும்!கண்கள்தான் தட்ட தட்ட உள்ளம் திறக்கும்..
மதன் கார்க்கி:
புலியோட பையனாச்சே...
பச்சைத் தீ நீயடா!
கச்சுப் பூ நானடா!
ஒற்றைப் பார்வை கொண்டே
பற்றிக் கொண்டாயடா!
வெற்றுக் கல் நானடா!
வெட்டும் உளி நீயடா!
அற்பப் பாறை என்னில்
சிற்பம் செய்தாயடா
கங்கை அமரன்:
இது ஒரு feel good song..
ஓர் சோலை புஷ்பம் தான்!
திரு கோயில் சிற்பம் தான்!
ஓர் சோலை புஷ்பம் தான்!
திரு கோயில் சிற்பம் தான்!
இதன் ராகம், தாளம் ஃபாவம்
அன்பைக் கூறும்
வைகை நதி ஓரம்!
பொன்மாலை நேரம்!
உதயகுமார்:
சின்னப்பிள்ளைல இருந்தே பிடிச்ச பாட்டு...அப்போ எந்த பாட்டும் வரிகள் தெரியாது..ஆனா இந்தபாட்டு மட்டும் அத்துபடி..
என்ன நினைச்ச என்ன நினைச்ச - சொக்கத்தங்கம்..
நான் தார சிற்பம் !உன்னோட வெப்பம்!
நான் தொட்டு பாக்குறப்போ என்ன நெனச்ச?
தீக்குச்சி வந்து தீக்குச்சி கிட்ட
சௌக்கியம் கேக்குதுன்னு நானும் நெனச்சேன்!
உன் கன்னக்குழி முத்தம் வச்சேன் என்ன நெனச்ச?
என் நெஞ்சுக்குழி மீதும் ஒன்னு கேக்க நெனச்சேன்!
ஏன் பேராச நூறாச கேக்கையில்
அடி தேன் மல்லி நீ என்ன நெனச்சடி?
ஆறேழு கட்டிலுக்கும் அஞ்சாறு தொட்டிலுக்கும்
சொல்ல நெனச்சேன் நான் சொல்ல நெனச்சேன்
ஒன்ன ஒட்டுமொத்த குத்தகையா அல்ல நெனச்சேன்
அல்ல நெனச்சேன் நான் அல்ல நெனச்சேன்
ஒன்ன ஒட்டுமொத்த குத்தகையா அல்ல நெனச்சேன்!
சிற்பம் பத்தின தமிழ் பாடல்கள்..எதையோ தேடி போய்,அழகானா தொகுப்பு கிடைச்சிருக்கு..கஜீராஹோ போறோம்..

இதான் காலையில பார்த்த புகைப்படம்..
No comments:
Post a Comment