சந்திரா ப்ரியதர்ஷினி posted: " சில எழுத்தாளர்கள் ,சில புத்தகங்கள், சில மெட்டுக்கள், சில பாடல்கள் எனக்கானது இல்லையோ என்றே, நிறைய நாள் அதன் வாசம் கூட முகராமல் இருந்திருக்கிறேன்..அப்படி சில எழுத்தாளர்கள் வரிசையில் நா.முத்துக்குமாரும் ஒன்று...பாடல் வரிகள் பிடிக்கும் , அது என்னவோ இவர" சந்திரா ப்ரியதர்ஷினி
சில எழுத்தாளர்கள் ,சில புத்தகங்கள், சில மெட்டுக்கள், சில பாடல்கள் எனக்கானது இல்லையோ என்றே, நிறைய நாள் அதன் வாசம் கூட முகராமல் இருந்திருக்கிறேன்.. அப்படி சில எழுத்தாளர்கள் வரிசையில் நா.முத்துக்குமாரும் ஒன்று... பாடல் வரிகள் பிடிக்கும் , அது என்னவோ இவர் புத்தகங்கள் மேல் ஈர்ப்பு வரவே இல்லை.. நண்பர்கள் படிப்பார்கள், பேசுவார்கள். இருந்தும், அபிப்பிராயமே இல்லை.
ஒருநாள் ஒரு போட்டோ பார்த்தேன் அதில் ,அவரோட, "அந்த வரிகள்" வாசிச்ச பிறகுதான், இவர் நமக்கானவர் என்று,பனுவலில் ஒரு ஐந்து புத்தகத்தை வாங்கினேன். முதல்-ல சின்ன புத்தகமா ஆரம்பிப்போம்னு "என்னை சந்திக்க இரவில் வராதே"ல தொடங்கினேன் .. ஆதவன் முத்துக்குமார் கவிதையோட புத்தக தொடக்கத்தை வாசிச்சுட்டு,அவர் பத்தின அறிமுகத்தோடு தொடங்கினேன்! பார்த்தா, ஜப்பான் கவிதைகளோட தமிழ் மொழிபெயர்ப்பு .. சரி ,இனி மேலோட்டமா வாசிச்சா, பெருசா ஈர்ப்பு இல்ல! ஆனா ஒரு சில கவிதைகள் கவிதைகள் ரொம்பவே நல்லா இருந்துச்சு.. அதிகமா பெண் கவிஞர்களோட கவிதைகலளா இருந்ததால ஒப்புமைப்படுத்திக்க முடிஞ்சது..உங்களுக்கு பிடிக்கலாம்.. வாசித்து பாருங்கள்..
இப்புத்தகத்தில் ஆங்காங்கே "ஆங்கில முதல் எழுத்து" கவிதைகளும் இதில் (அடக்கம்) அடங்கும்..
பிறகு அடுத்த 78 பக்கம் கொண்ட, "பச்சையப்பனில் இருந்து ஒரு தமிழ் வணக்கம்"புத்தகம் .
"தந்தை எ.நாகராஜனுக்கும் எழுத்தாளர் சுஜாதாவுக்கும் சமர்ப்பணம்" இதான் தொடக்கம்.. யாருமில்லா நடுவீதியில நம்மளுக்கு பிடிச்சவங்கள பார்த்தா வருமே, ஒரு பரவசம்! அதுபோல இருந்துச்சு. அரசியல், சமூகம், சினிமா, உலகம் பற்றி புறநானூறு போல எழுத்துரையாடல்கள்..புரட்சிக் கவிதைகளை சர்க்காஸத்துடன் விருந்தளித்திருக்கிறார். அதில் எனக்கு பிடித்தது 'இந்தியா சிறுகுறிப்பு' என்ற தலைப்பின் கீழ் இருந்த ஒரு கவிதை..
"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்". இந்த கவிதைதான் அந்த புத்தகத்திற்கான பரிந்துரையாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்..
அடுத்து, கொஞ்சம் அதிக பக்கங்கள் கொண்ட மற்றும் எனை ஈர்த்த வரிகளைக் கொண்ட "கண் பேசும் வார்த்தைகள்" . வாசிக்கும் பொழுதே, வைரமுத்துவின் "பெய்யென பெய்யும் மழை " கொஞ்சம் தூரல் போட்டது. நா முத்துக்குமாரோட பாடல் அனுபவங்கள் கச்சிதமா, அழகா சொல்லி இருக்காரு. இயக்குனர்கள், இசையமைப்பாளர்களோட தெரியாத கோணங்களை தெளிவாக பார்வைக்கு வச்சிருக்காரு ...புதிய புத்தகங்களயும்,எழுத்தாளர்களையும் அறிமுக படுத்தியிருக்காரு.. இவருக்கு பிடித்தவர்,நண்பர்"யுவன்" .. யெஸ்!நம்மாளு...
இன்னும் ஆர்வத்தோட வாசிச்சேன்.. யுவனில் தொடங்கி யுவனில் முடித்துள்ளார். புத்தகத்தை 7 ஜி ரெயின்போ காலனியின் "கண் பேசும் வார்த்தைகள்" அனுபவம் தொடங்கி, "நினைத்து நினைத்து பார்த்தேன்"ல் முடித்தது என்னவோ என் மனதுக்கு முழு நிறைவே தந்தது. அவர் அறிமுகப்படுத்தின இசையமைப்பாளர்கள் மீது புது ஈர்ப்பு ..பாடல்கள் தேடி தேடி ரசித்தேன்..
நீ உயிருடன் இருக்கும்போது உன்னை பற்றி பெரிய அளவில் நினைத்ததில்லை.. இப்போது எப்படியாவது உன் நினைவு வந்து போகிறது தினமும்!
மழை நேரத்தின் தேநீர் போல சுகானுபவம், இந்த புத்தகம்.
இருந்திருக்கலாம்..
உனக்கான வரியை உனக்கே எழுதுகிறேன்..
"ஒரு தருணம் எதிரில் தோன்றுவாய் என்றே வாழ்கிறேன்" லவ் யூ நா.முத்துக்குமார்.. நினைவுகளின் தழுவல்களும் முத்தங்களும் ..
No comments:
Post a Comment