படம் பாக்க போன முதல் காரணம்,அருண் ராஜா காமராஜ் படம்,கண்டிப்பா கண்டண்ட் இருக்கும்னுதான்...article-15 remake movie வேற..
வேற லெவெல் screen play..படம் கரு என்னவோ born equal ங்கிற ரெண்டு வார்த்ததான்...it has so much weight on it னு சொல்லலாம்... படம் விறு விறுன்னு போய்டுச்சு..lag phase இல்ல...டயலாக் ஒவ்வொன்னும் ஒவ்வொருத்தரையும் கண்டிப்பா உறுத்தும்...
Caste discrimination பத்தி தெளிவா சொல்லிருக்காப்டி..
படிக்கிற பள்ளிக்கூடத்துல,இருக்குற ஊருல ,வேல செய்ற இடத்துல ,பொது இடத்துலனு இப்டி எல்லா இடத்துலயும் உள்ள தலித்களின் மீதான வன்முறைய,ஒடுக்கு முறைகள பத்திதான் படம் பேசுது..படத்துல இருக்க ஒவ்வொருத்தரும் தினம் தினம் நாம கடந்து போற,டீச்சரோ,பக்கத்து வீட்டுக்காரங்களோ,கூட வேல பாக்குறவங்களோ தான்..
சாதியமுறை ஒடுக்குமுறைகளை அனுபவிக்கிறவங்களோட வலி ,வேதனை எவ்வளவு பயங்கரமானதுனு பாத்தா தெரியும்..
ஒரு கலைஞனா,நல்ல படத்தை படைச்சிருக்காரு..ஆரிக்கு ஒரு ஹார்ட்...
Article 15 of the Constitution of India forbids discrimination on grounds only of religion, race, caste, sex, or place of birth.
• அரசு எந்தக் குடிமகனையும் அவனுடைய மதம், இனம், சாதி, பால், பிறப்பிடம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைக் காரணமாகக் காண்பித்து, அவனை பாகுபாட்டுடன் நடத்தக் கூடாது.
• எந்தக் குடிமகனும் அவன் சார்ந்துள்ள மதம், இனம், சாதி, பால், பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் கடை, பொது ஒய்வு விடுதிகள், உணவு விடுதிகள் மற்றும் பொதுவான பொழுதுபோக்கு இடங்களில் நுழையும் போதும் தடைப்படுத்தவோ அல்லது நிபந்தனை விதிக்கப்படவோ கூடாது.
எத்தன முறை,எத்தனை வகையா,எத்தன பேரு வந்து சொன்னாலும் திருந்திடவா போறோம் ..அதுக்குனு சொல்லாமலா இருக்க முடியும்..புரியிற வரை சொல்லுவோம்...
எல்லாரும் சமம்னா யாருதான் ராஜா ஆவாங்க...!எல்லாரும் சமம்னு நினைக்கிறவந்தான் ராஜா ஆக முடியும்..-இதான்...
#நிச்சயம் பார்க்க வேண்டிய படம்..
No comments:
Post a Comment